Monday, August 10, 2009

பள்ளி சிறுவர்கள் மேல் மோதியதால் பேருந்து தீக்கிரை

சந்தாபுரா(பெங்களூரு) அருகில் இன்று KPN பஸ் இரு பள்ளிச்சிறுவர்கள் மீது மோதிவிட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பேருந்துக்கு தீ வைத்து விட்டனர்.
(மேலே உள்ள படத்தில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன)


கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருக்கைகளிலிருந்து புகைமூட்டம் உருவாகிறது. அதற்கும் கீழே படங்களில் பேருந்தின் என்ஜின் வரை தீ பரவியதில் பேருந்து முழுமையாக எறிந்த நிலையில் இருக்கிறது.


இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பெங்களூரு எல்லைகருகில் நடப்பதுண்டு. கர்நாடக வண்டிகள் கூட எரியூட்டபட்டத்தை கேள்விபட்டிருக்கிறேன். வண்டிகள் எரியூட்டப்படா விட்டாலும் வேலூர், வாணியம்பாடி புறவழிசாலைகளில் இது போன்று மக்கள் விபதுக்குள்ளாகிறார்கள்.

இதற்கு காரணம் பெரும் சாலைகளால் மக்களின் நடமாட்டம் மிகுந்த பாதிப்புள்ளகிறது. அவர்கள் கடந்து செல்ல பாதைகளில்லை. இது போன்ற இடங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பு, கார், பாஸ்களை விட உள்ளூர் மக்களின் நடமாட்டத்திற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.

Saturday, August 8, 2009

பில்லியனர்களின் சமூக சேவை - குருமூர்த்தியின் கட்டுரை பற்றிய விமர்சனம்

நேற்று இந்தியன் எக்ஸ்பிரஸ்'ல் வெளிவந்த குருமூர்த்தியின் கட்டுரை, பெரும்பணக்காரர்களின் சமூக சேவை பற்றிய சோனியா காந்தியின் கருத்துக்களை மறுத்து சில விமர்சனங்களை முன்வைக்கிறது.

முதலாவதாக, சோனியா காந்திக்கு இந்திய கலாச்சராத்தை பற்றி ஒன்று தெரியாது என்று வாதிடுகிறார். நம் நாட்டில் சோனியா காந்திக்கு மட்டுமில்லை, நிறைய பேருக்கு கலாச்சாரம் குறித்து விரிவான பார்வை இல்லை. பிற மொழி மற்றும் மாற்று கலாசாரம் குறித்து அதிகம் தெரியாது. அது நமது தவறு என்றும் சொல்ல முடியாது. அது ஒரு வகை அறியாமை, அவ்வளவு தான்.

அடுத்ததாக இந்தியாவில் மத நிறுவனங்கள், ஜாதி அமைப்புகள் பெருமளவில் சமூகப்பணி செய்வதை உதாரணங்களுடன் குறிப்பிடுகிறார். உதாரணத்திற்கு புட்டபர்த்தி சாயி பாபாவின் முயற்சிகளை முன்வைக்கிறார். சாயி பாபாவின் மேல் எனக்கு கடும் விமர்சனம் இருந்தாலும், குடிநீருக்கான அவரது முயற்சிகள் பாராட்டத்தக்கவை. அதே போல், அவரது சேவையை பிஹார், வடக்கு கர்நாடகா, ஜார்கண்ட், ஒரிசா போன்ற இடங்களுக்கும் செய்தால் நல்லது.

ஆனால் முக்கியமாக அவர் இந்திய கார்பொரேட் நிறுவனங்களின் சமூக சேவைக்கான பங்களிப்பைப்பற்றி குறிப்பிடுகையில், இந்திய கம்பெனிகள், அமெரிக்கா நிறுவனங்களை விடஒப்பீட்டளவில் மிக மிக சிறியவை, எனவே இந்திய கம்பெனிகள் அதிகமாக சமூக சேவையில் பணத்தை செலவு செய்வது மிக கடினம். அதாவது சொல்ல வரும் விஷயம் இது தான், அமெரிக்காவில் இருக்கும் அளவு இங்கே யாருக்கும் பண வசதி இல்லை. இதில் பாதிதான் உண்மை. இந்த கருத்து முற்றிலும் தவறானது என்பது என் எண்ணம்.

மேற்கண்ட கருத்தை இரண்டு வகையாக நிராகரிக்க முடியும்.

1. மேற்கத்திய நாடுகளில் கம்பெனிகள் அளவுக்கு, தனி நபர்கள் சமூக பணிகளில் ஈடுபடுகிறார்கள். தனி நபர் அளவில் பார்த்தால் இந்திய முதலாளிகள் உலக பணக்காரர்களுடன் ஒப்பிட தகுந்தவர்கள். மேலும் உலக பெரும்பணக்காரர்கள் பட்டியலில் முதல் பத்து பேரில் மூன்று பேர் இந்தியர்கள். இவர்கள் யாரும், சமூக சேவைக்காக சல்லி காசு கொடுத்ததாக தகவல்கள் இல்லை.

2. மேற்கண்ட கருத்தின் படி, இந்திய முதலாளிகள் பெரும் பணத்தை செல்வழிக்கா விட்டாலும், தன்னால் இயன்ற அளவுக்காவது ஏதாவது செய்திருகிரார்களா என்று பார்த்தால் பெரும் ஏமாற்றமே மிஞ்சும். பெரும்பாலும் இவர்கள் காசு கொடுப்பது கோவில்கள் அல்லது மடங்களுக்கு மட்டுமே. அனால் மேற்கத்திய பெரும்பனக்காரர்களில், குறிப்பாக பில் கேட்ஸ், warren buffet இருவரும் தங்கள் சொத்தின் பெரும்பகுதியை சமூக அறக்கட்டளைகளுக்கு கொடுத்துள்ளனர். அந்த வகையில் பார்த்தல் இன்று இந்தியாவில் அப்படி ஒருவர் கூட இல்லை.

மேலே குறிப்பிட்ட விஷயங்களை தவிர மேலும் சிலவும் உண்டு.

இந்தியாவில் சமூக சேவைக்கு காசு கொடுக்க மறுக்கும் பலர், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்கொடை கொடுத்துள்ளனர். உதாரணத்திற்கு அம்பானிகள், இந்தியாவில் திருப்பதி வெங்கடாசலபதியை தவிர வேறு யாருக்கும் நன்கொடை கொடுத்ததாக குறிப்புகள் இல்லை. ஆனால், அமெரிக்காவில் இவர்கள் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்துக்கு மிகபெரும்தொகை நன்கொடையாக கொடுத்துள்ளார்கள். இவர்கள் ஏன் அங்கே நன்கொடை கொடுக்க வேண்டும்? அதற்க்கு ஒரே பதில் இதுதான். அங்கே சமூக அக்கறை இல்லாத பணக்காரர்களை யாரும் மதிப்பதில்லை. அம்பானி போன்ற செல்வந்தர்களுக்கு அமெரிக்கா சமூகத்தின் மதிப்பை பெறுவதற்கான வழி இந்த நன்கொடை.

அதே போல், தன் தொழில் துறை சம்பத்தப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு அல்லது மேம்பாட்டுக்கு பணம் செலவழிப்பது என்ற பேச்சே கிடையாது. ஒரு உதாரணத்திற்கு மென் பொருள் துறையில் இன்று நிலவி வரும் பெரும் பிரச்சினை மென்பொருள் கல்வியின் தரம். மென்பொருள் கல்வியின் தரத்தை மேம்படுத்த அதிக பொருள் செலவாகாது. பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர் தரம் ஆகிய இரண்டையும் சரி செய்வதன் மூலம், மென்பொருள் கல்வியில் மிகப்பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும். அவ்வாறு நடந்தால் அது மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் நிறுவங்களுக்கு சாதகாமாக இருக்கும். ஆனால் இவ்வாறான மேபாட்டுக்கான முதலீடுகளை இந்திய நிறுவங்கள் செய்வதில்லை. அப்படியே செய்தாலும் இவை IIT மற்றும் IIM தாண்டி யோசிப்பதில்லை. இது பெரும் அபத்தம் என்றே நினைக்கிறன்.

இந்தியாவில் ஆராய்ச்சிகளுக்காக பெரும் நிறுவனங்கள்(டாடா வை தவிர) எதுவும் காசு செலவழிப்பதில்லை. அவ்வாறான முதலீடுகள் மூலம், தொழில்நுட்ப இறக்குமதிகளை பெரும்பாலும் தவிர்க்க முடியும். மாறாக, தொழில்நுட்ப இறக்குமதியால் உண்டாகும் விலை உயர்வு(இறக்குமதி வரி) நுகர்வோரின் தலையில் விழுகிறது. அதையும் தவிர ஏதாவது பொருளை கொண்டு வந்து, ஜெர்மன் டெக்னலாஜி, ஜப்பான் டெக்னாலஜி என்று சொல்லி விற்பது இங்கே ரொம்ப சுலபம். எனவே பெரும் நிறுவனங்களுக்கு அவ்வாறான முதலீடு பற்றிய அக்கறை இருப்பதில்லை.

குருமூர்த்தி இந்திய நிறுவங்களையும், பணக்காரர்களையும் ஆதரிப்பதற்கு இன்னொரு காரணம். அவர் இந்தியாவில் பெரும்பனக்கார்களின் ஆலோசகராகவும் உள்ளார். குறிப்பாக பிர்லா மற்றும் இதர பிற நிறுவனங்களுடன் நெருக்கமானவர், எனவே அவர் இந்த நிறுவனக்ளை பற்றிய விமர்சனங்களை தவிர்க்க முயல்கிறார் என்றுதோன்றுகிறது.