Monday, August 10, 2009

பள்ளி சிறுவர்கள் மேல் மோதியதால் பேருந்து தீக்கிரை

சந்தாபுரா(பெங்களூரு) அருகில் இன்று KPN பஸ் இரு பள்ளிச்சிறுவர்கள் மீது மோதிவிட்டத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் பேருந்துக்கு தீ வைத்து விட்டனர்.
(மேலே உள்ள படத்தில் பேருந்தின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டுள்ளன)


கீழே உள்ள படத்தில் பேருந்தின் இருக்கைகளிலிருந்து புகைமூட்டம் உருவாகிறது. அதற்கும் கீழே படங்களில் பேருந்தின் என்ஜின் வரை தீ பரவியதில் பேருந்து முழுமையாக எறிந்த நிலையில் இருக்கிறது.










இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து பெங்களூரு எல்லைகருகில் நடப்பதுண்டு. கர்நாடக வண்டிகள் கூட எரியூட்டபட்டத்தை கேள்விபட்டிருக்கிறேன். வண்டிகள் எரியூட்டப்படா விட்டாலும் வேலூர், வாணியம்பாடி புறவழிசாலைகளில் இது போன்று மக்கள் விபதுக்குள்ளாகிறார்கள்.

இதற்கு காரணம் பெரும் சாலைகளால் மக்களின் நடமாட்டம் மிகுந்த பாதிப்புள்ளகிறது. அவர்கள் கடந்து செல்ல பாதைகளில்லை. இது போன்ற இடங்களில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பு, கார், பாஸ்களை விட உள்ளூர் மக்களின் நடமாட்டத்திற்கு முன்னிரிமை அளிக்க வேண்டும்.

3 comments:

Thiru said...

அங்கே மட்டும் இல்லை பாண்டியன் - சென்னை புறநகர் பகுதிகளில் மக்கள், சிறுவர்கள் சாலைகளை கடப்பது எனக்கு ஹார்ட் அட்டாக் தந்திருக்கின்றன. பஸ்ஸை எரித்து கோபத்தை காட்டுவதால் எதுவும் மாறப்போவதில்லை, மனிதர்கள் மாறாதவரை. தேவையான Overpasses / Underpasses இல்லை என்பதும் இந்த மாதிரி விபத்துகளின் காரணம்.

BOBY GEORGE KODIATT said...

THIS IS A CAUSE FOR CONCERN, THANKS ALAGESH FOR THIS POST,

EVENTHOUGH THE PUBLIC ANGER IS JUSTIFIED THE RESULTANT VIOLENCE IS UNWARRANTED AND UNJUSTIFIABLE.

தருமி said...

"இங்கே யாருக்கும் புத்தியில்லை"

Post a Comment